நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2024

Comments:0

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்

மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் தேர்வில் நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர்

இன்றைய தினம் நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியான நிலையில் தயார் நிலையில் மாணவர்கள்.

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்ட நிலையில், அதனை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு மே 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைவுச் சீட்டு வெளியாகியிருந்தாலும், பல மாணவர்களால் அதனை பதிவிறக்கம் செய்ய முடியாமல் உள்ளது. சிலருக்கு தவறான தகவல் தரப்பட்டிருப்பதாக தகவல் காண்பிக்கிறது. சிலருக்கு நுழைவுச் சீட்டில் புகைப்படம் உள்ளிட்டைவை சரியாக பதிவிறக்கம் ஆகாமல் உள்ளது.

முழுமையாக நுழைவுச் சீட்டு காண்பிக்கப்பட்டாலும், அதனை பதிவிறக்கம் செய்யும்போது, பக்கம் காணாமல் போவது போன்ற சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து ஏராளமான மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளித்துள்ளனர். இதனால் வெளியே ஆன்லைன் மையங்களுக்கு வந்து பதிவிறக்கம் செய்யும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை, சிக்கலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews