'நீட்' தேர்வுக்கு மறுநாள் பிளஸ் 2 தேர்வு முடிவு.
நடப்பாண்டு பொதுத்தேர்வு முடிவுக்கு முன் 'நீட்' தேர்வு நடப்பதால், தேர்வுத்துறை.
-மாணவர் சங்கடம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, மருத்துவப்படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு, மே, 7ல் நடந்தது.
ஒரு நாள் முன்னதாக, மே, 6ல், பிளஸ் 2 பொதுதேர்வு முடிவு வெளியாக இருந்தது. பொதுத்தேர்வு முடிவை பார்த்த மறுநாளே, 'நீட்' தேர்வு எழுதும் போது, மாணவர்களுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
தேர்வு முடிவு இரண்டு நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு, மே, 8ம் தேதி வெளியானது.
'நீட்' தேர்வு எழுதிய பின், மாணவ, மாணவியர் தேர்வு முடிவை அறிந்தனர். இந்நிலையில், நடப்பாண்டு 'நீட்' தேர்வு வரும் 5 ம் தேதி நடக்கிறது.
பொதுத்தேர்வு முடிவுகள், 6 ம் தேதி வெளியாகிறது. 'நீட்' தேர்வுக்கு பின், பொதுத்தேர்வு முடிவு என்பதால், தேர்வுத்துறை.
-மாணவர் சங்கடம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.