புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” - வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مايو 14، 2024

Comments:0

புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” - வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்!



புரொஃபைல் படங்கள் இனி பாதுகாப்பாக இருக்கும்” - வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்!

அந்த வகையில் சமீபத்தில் பயனர்களின் குறிப்பிட்ட அரட்டைகளை ( சாட்டிங்ஸ்) லாக் செய்யும் புதிய அம்சத்தை கொண்டு வர முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மத்தியிலான போட்டி மற்றும் சந்தையில் தம்மை நிலை நிறுத்திக்கொள்வது ஆகியவற்றுக்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு.

அந்த வரிசையில் வாட்ஸ் ஆப் சமூக ஊடகத்தில் ஒருவரது புரொஃபைல் படத்தை ஸ்கிரீன் ஷாட் எடுப்பது இனி தடை செய்யப்படுகிறது.

வாட்ஸ் ஆப்-பின் தாய் நிறுவனமான மெட்டா, தனது இன்னொரு பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்-கில், பயனரின் தேர்வுக்கேற்ப இந்த வசதியை நடைமுறையில் வைத்துள்ளது. தற்போது வாட்ஸ் ஆப் செயலியிலும் இதே வசதி தாமதமாக அறிமுகமாகிறது. இதன்படி ஒரு பயனரின் புரொஃபைல் படத்தை இதர பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது இயலாது போகும். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முயற்சிப்பவருக்கு ஃபேஸ்புக் பாணியில் பாப் அப் தகவல் மூலம் வாட்ஸ் ஆப் உணர்த்தவும் செய்யும்.

2 மாதங்களுக்கு முன்னர் ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகமான இந்த வசதி, தற்போது ஐபோன்களுக்கான ஐஓஎஸ் பயனருக்கும் அறிமுகமாகிறது. ஆனால் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டிலுமே ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை வாட்ஸ் ஆப் தடைசெய்தாலும், புரொஃபைல் படங்களை இன்னொரு கேமரா மூலம் படம் எடுக்க இயலும்.

எனவே, பயனர்கள் தாம் அனுமதிக்கும் நபர்கள் தவிர்த்து ஏனையோர் தம் புரொஃபைல் படங்களை பார்வையிட முடியாதபடி தடை செய்யும் செட்டிங்ஸ் நடைமுறைகள் மூலம் தங்கள் பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة