Music Schools, Gavin Colleges of Art Admissions Commencement: Notification by Director of Arts and Culture Department இசை பள்ளிகள், கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்: கலை பண்பாட்டு துறை இயக்குநர் அறிவிப்பு
கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் இசைப் பள்ளிகள்,கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது என கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் சே.ரா.காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (சீர்காழி), திருவாரூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் செயல்படுகின்றன.
இதேபோல், சென்னை, கோவை, திருவையாறு, மதுரைஆகிய இடங்களில் அரசு இசைக்கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில் இசை, நாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டப்படிப்புகளும் மேற்காண் கலைகளோடு கிராமியக் கலைகளில் பட்டயப் படிப்புகளும் உள்ளன. சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் ஓவியக்கலை சார்ந்த பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளும், மாமல்லபுரத்தில் செயல்படும் அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் சிற்பக் கலையில் இளங்கலைப் பட்டம் மற்றும் கோயில் கட்டிடக் கலையில் பி.டெக் படிப்புகளும் உள்ளன.
இந்நிலையில், இக்கல்வியகங்களில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தற்போது தொடங்கியுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள படிப்புகள் விவரம், வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி விவரங்களை www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். மேற்காணும் 7 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.