தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பி.ஏ. பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில்
*பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட படிப்பு,*
எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு *மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப் படிப்பு),*
தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன
. *பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர்*
*மேலாண்மை) படிப்புகள்*
சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.*பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் (ஏ.எல்.)* படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகின்றது. இக்கல்வி நிலையம் நடத்தி வரும் *பி.ஏ (தொழிலாளர் மேலாண்மை)*பட்டப் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில், தற்போது மேற்கண்ட படிப்பிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 30.05.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்ப கட்டணம் – ரூ. 200/-
For SC/ST – ரூ. 100/-(சாதிச் சான்றிதழ் நகல் தாக்கல் செய்ய வேண்டும்)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.