CBSE பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!
சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் - மண்டலம் வாரியாக தேர்ச்சி சதவீதம்.
சென்னை - 98.47 %
திருவனந்தபுரம் - 99.91%
விஜயவாடா - 99.04%
பெங்களூர் - 96.95%
சி.பி.எஸ்இ தேர்விலும் பெண்களே அதிகம் தேர்ச்சி
அனைத்துப் பாடங்களிலும் ஆண்களை விட பெண்கள் 6.40% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆண்கள் - 85.12%
பெண்கள் - 91.52 %
மாற்று பாலினத்தவர் - 50%. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
நாடுமுழுவதும் தேர்வெழுதிய 12 ஆம் வகுப்பு மாணவர்களில் 87.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், மண்டல வாரியாக 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.04 சதவீதத்துடன் விஜயவாடா மண்டலம் 2-ம் இடத்திலும், 98.47 சதவீதத்துடன் சென்னை 3-ம் இடத்திலும், 96.95 சதவீதத்துடன் பெங்களூரு 4-ம் இடமும் பிடித்துள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதல் 4 இடங்களையும் தென் இந்திய மாநிலங்களே பெற்றுள்ளது.
உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் (78.25%) , நொய்டா (80.27%) மண்டலங்கள் கடைசி இடங்களையே பிடித்துள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.
12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.
தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 93.60 சதவீத மாணவர்கள் தேர்ச்சி.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.