தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 96.02 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் முதலிடம்;
95.56 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2-வது இடமும்;
95.23% சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3-வது இடம்
பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!
கோவை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 96.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய 8,11,172 மாணவ, மாணவிகளில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதம் 91.17%. வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், கோவை 96.02 சதவிகிதத்துடன் தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
ஈரோடு 95.56 சதவிகிதத்துடன் இரண்டாமிடமும், திருப்பூர் 95.23 சதவிகிதத்துடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளது.
சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை 91.68 சதவிகிதம் தேர்ச்சி பெற்று 17-வது இடத்தில் உள்ளது.
கடைசி இடத்தில் 89.41 சதவிகிதம் தேர்ச்சி பெற்று விழுப்புரம் மாவட்டம் உள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.