11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 91.17 % சதவிகிதம் பேர் தேர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 14, 2024

Comments:0

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது; 91.17 % சதவிகிதம் பேர் தேர்ச்சி

css


11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது;

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in , http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகள் 7.43% சதவிகிதம் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்

91.17 % சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது;

மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in , http://tnresults.nic.in மற்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்

GNgtx5AaMAAYfrK
பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானது .

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது.

இந்த தேர்வை 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 3 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்தும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.

இதுதவிர, 5 ஆயிரம் தனித்தேர்வர்களும், 187 சிறை கைதிகளும் பிளஸ்-1 தேர்வை எழுதினார்கள்.

இந்த நிலையில், பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

பிளஸ்-1 தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல் மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

அதேபோல், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும் தேர்வு முடிவுகளை அறியலாம்.

மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84616635