சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியீடு:
முதல் 3 இடங்களில் ஆண்கள்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் முதல் 3 இடங்களை ஆண்கள் பிடித்து உள்ளனர்.
( ஏப்.,16) வெளியான தேர்வு முடிவுகளில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அனிமேஷ் பிரதான் 2வது இடத்தையும், தோனாரு அனன்யா ரெட்டி 3வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் 5 இடங்களில் 3 இடங்களை ஆண்களும், 2 இடங்களை பெண்களும் பிடித்துள்ளனர்.
மொத்தம் 1016 பேர் வெற்றி பெற்ற நிலையில், 664 பேர் ஆண்கள், 353 பேர் பெண்கள்.
இவர்களை பல்வேறு துறைகளில் பணியில் அமர்த்த யுபிஎஸ்சி பரிந்துரை செய்துள்ளது.
குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளின் முடிவு வெளியீடு:
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் ஆகிய பணிகளுக்கு மொத்தம் 1,016 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
upsc.gov.in என்ற இணையதளத்தில் குடிமைப்பணி தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் - UPSC
சிவில் சர்வீஸ் - தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த மருத்துவர்.
சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 78ஆவது இடமும், தமிழ்நாட்டில் முதலிடமும் பிடித்துள்ளார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பிரசாந்த்.
2022ஆம் ஆண்டு MBBS முடித்த பிரசாந்த், 8 மாதங்களில் சொந்த முயற்சியில் படித்து முதல்முறையிலேயே தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்து அசத்தல்.
சிவில் சர்வீஸ் - புதுச்சேரியில் முன்னாள் ஐஜி மகள் முதலிடம்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 64ஆவது இடமும் புதுச்சேரியில் முதலிடத்தையும் பெற்றுள்ளார் மாணவி வினோதினி.
வினோதினி புதுச்சேரி காவல் துறையில் ஓய்வுப்பெற்ற ஐஜி சந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، أبريل 17، 2024
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.