அரசு ரிப்போர்டர் வேலை.. 12ம் வகுப்பு தான் கல்வித்தகுதி..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، أبريل 14، 2024

Comments:0

அரசு ரிப்போர்டர் வேலை.. 12ம் வகுப்பு தான் கல்வித்தகுதி..!

அரசு ரிப்போர்டர் வேலை.. 12ம் வகுப்பு தான் கல்வித்தகுதி..!

தமிழக காவல்துறையில் சுருக்கெழுத்து பணியகத்தில் இளநிலை நிருபர் (Junior Reporter) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதில் மொத்தம் 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மாதம் சம்பளம் ரூ.36,200 - 1,14,800 - வரை வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024 ஆகும். கல்வித் தகுதி

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி

01.07.2023 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தகுதித் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0 என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி:

The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004.

மேலும் விவரங்களுக்கு:

https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة