தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது
85 வயதை கடந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி தொடக்கம்
தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டுக்கே சென்று தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பிரசாரம் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்குகளை பெற தேர்தல் ஆணையம் குழுக்களை அமைத்துள்ளது.
தமிழகத்தில் இன்றுமுதல் தபால் வாக்குப் பெறும் பணியை தேர்தல் அலுவலர்கள் தொடங்கியுள்ளனர்.
ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வீடுகளுக்கே சென்று முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடம் வாக்குக்களை பெற்று வருகின்றனர்.
சில மாவட்டங்களில் நாளைமுதல் தபால் வாக்குகள் பெறும் பணியை தொடங்கவுள்ளனர்.
Explanation of how to pay postal vote without error!!! - தபால் வாக்கினை பிழையின்றி செலுத்தும் முறை விளக்கம்!
தபால் வாக்கினை பிழையின்றி செலுத்தும் முறை விளக்கம் ... திரு.கந்தசாமி IAS அவர்களின் வீடியோ
CLICK HERE
بحث هذه المدونة الإلكترونية
الخميس، أبريل 04، 2024
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.