மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 06، 2024

Comments:0

மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு



மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு Dismissal of Headmaster who was under the influence of alcohol

மது போதையில் இருந்த தலைமை ஆசிரியர் பணியிலிருந்து விடுவிப்பு.(removed from service)

தருமபுரி மாவட்டம் , தருமபுரி ஒன்றியம் , மாரவாடி , ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் திரு.எம்.குணசேகரன் என்பவர் பள்ளி வேலை நேரத்தில் மதுபோதையில் இருந்தது மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்க கல்வி ) அவர்களின் பள்ளிபார்வையின் போது கண்டறியப்பட்டது . இவரை மருத்துவ பரிசோதனை உட்படுத்தி மருத்துவ சான்று பெறப்பட்டது.

இவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விசாரணை அலுவலரின் விசாரணை அறிக்கை மற்றும் மருத்துவரின் சான்றுப்படியும் இவர் மது அருந்தி இருந்தது நிரூபணமானது . தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதனால் மேற்கண்ட தலைமையாசிரியரை தருமபுரி மாவட்ட கல்வி அலுவலரால் ( தொடக்கக் கல்வி ) இன்று ( 05.04.2024 ) பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கப்பட்டது .

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة