CSEET 2024 தேர்வு விண்ணப்பதிவு தொடக்கம் – தேர்வுகள் ஜூலை 6ம் தேதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، أبريل 20، 2024

Comments:0

CSEET 2024 தேர்வு விண்ணப்பதிவு தொடக்கம் – தேர்வுகள் ஜூலை 6ம் தேதி



CSEET 2024 தேர்வு விண்ணப்பதிவு தொடக்கம் – தேர்வுகள் ஜூலை 6ம் தேதி !! CSEET 2024 Exam Application Date Begins – Exams on 6th July !!

கம்பெனி செகரட்டரி எக்ஸிக்யூட்டிவ் நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தற்போது தொடங்கி நடந்து வரும் நிலையில் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CSEET தேர்வு:

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான கம்பெனி செக்யூரிட்டி எக்ஸிகியூட்டி நுழைவுத் தேர்வை நடத்த உள்ளது. தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முறையாக வெளியிடப்பட்டு தற்போது விண்ணப்ப பதிவுகள் தொடங்கி நடந்து வருகிறது.

ஜூன் 15, 2024 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும், விண்ணப்பித்த அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 6,2024-ம் தேதி அன்று தேர்வை நடத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இத்தேர்வுக்கு பதிவு செய்ய தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

தேர்வு கூடத்தில் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், பேனா, பென்சில், நோட்புக் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. OFFICIAL NOTICE
CLICK HERE TO DOWNLOAD PDF

REGISTRATION LINK
CLICK HERE

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة