மாணவர் சேர்க்கை - இயக்குநர் அலுவலகத் தகவல்... Admissions - Director's Office Information...
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கவனத்திற்கு,
பொது சுகாதாரத் துறையின் மூலம் பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் கடந்த 20 நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பெற்றோர்களுக்கு தலைமையாசிரியர் மூலமாக தொடர்பு கொண்டு பேசப்பட்டுள்ளது அதேபோல 14417 மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் பேசப்பட்டுள்ளது, பள்ளி வயது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள்பள்ளிக் கல்வித் துறையின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெற்றோர்களுக்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
எனவே மீதம் உள்ள பெற்றோர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வருகின்ற 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிக்குள் முழுவதுமாக தொடர்பு கொண்டு தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்திட உரிய விழிப்புணர்வையும் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.