அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவர்கள் சேர்க்கை So far 3.23 lakh students have been enrolled in government schools
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டு இதுவரை 3.23 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில்வரும் கல்வியாண்டுக்கான(2024-2025) மாணவர் சேர்க்கைப் பணிகள் கடந்த மார்ச் 1 முதல் தொடங்கப்பட்டன.
இதுவரை 3.23 லட்சம் மாணவர்கள் வரை இணைந்துள்ளனர்.
சேர்க்கை தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குஅனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
பொது சுகாதாரத் துறை மூலம் 2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்த குழந்தைக ளின் புள்ளி விவரம் பெறப்பட்டு அவை பள்ளிகளுக்கு எமிஸ் தளம் வழி யாக அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 20 நாள் களில் 3.5 லட்சம் பெற்றோர்களுக்கு தலைமையாசிரியர்கள் மூலமாக
தொடர்பு கொண்டு பேசப்பட்டுள்ளது.
அதேபோல், பள்ளிக்கல்வியின் உதவி மைய எண்ணில்(14417) இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் பேசப்பட்டுள்ளது.
5 வயதான குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல் வேறு பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
السبت، أبريل 20، 2024
Comments:0
அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.23 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.