முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலுக்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مارس 18، 2024

Comments:0

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலுக்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலுக்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு Interim stay on seniority list for promotion of Master Teachers - High Court order

கள்ளர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்து ஐகோர்ட் மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கள்ளர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அவர் குறிப்பிட்டுள்ள மனுவில் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கான பணி மூப்பு பட்டியலை கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கும், பணி மூப்பு பட்டியலுக்கும் தடை விதிக்க வேண்டும். பணி மூப்பு பட்டியலை சரி செய்த பிறகே கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இந்த வழக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி கள்ளர் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் வழக்கு விசாரணையை 4 வாரம் ஒத்திவைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.g

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة