அரசு பள்ளியில் பிறந்தநாள் விழா: மாணவனுடன் நடனமாடிய ஆசிரியை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مارس 25، 2024

Comments:0

அரசு பள்ளியில் பிறந்தநாள் விழா: மாணவனுடன் நடனமாடிய ஆசிரியை



அரசு பள்ளியில் பிறந்தநாள் விழா: மாணவனுடன் நடனமாடிய ஆசிரியை

ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர். ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார்.

ஆந்திராவில் உள்ள அரசு பள்ளியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியை வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாணவர்கள் ஆசிரியையின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளை செய்தனர். காலை ஆசிரியை வகுப்பறைக்கு வருவதற்கு முன்பாக ஹேப்பி பர்த்டே மேடம் என பெயர் பலகையில் எழுதி வரவேற்பு அளித்தனர்.

பின்னர் வகுப்பறையில் பிறந்தநாள் கேக் வெட்டி ஆசிரியைக்கு ஊட்டினர். தங்களது செல்போனில் இந்தி படத்தில் இருந்து குத்துபாட்டை ஒலி பரப்பினர்.

அப்போது ஆசிரியை மெய்மறந்து குத்து பாட்டுக்கு ஏற்றார்போல் நடனம் ஆடினார். மாணவர் ஒருவர் ஆசிரியையின் சேலை முந்தானையை எடுத்து அவரது முகத்தை மூடியபடி நடனம் ஆடினார்.

இந்த காட்சிகளை வகுப்பறையில் உள்ள மாணவர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

ஆசிரியையின் நடனத்தை பார்த்த பலரும் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடுவது தவறில்லை. ஆனால் வகுப்பறையில் நடனம் ஆடியதால் அவர் ஆசிரியையாக இருப்பதற்கு தகுதியற்றவர் எனவும், ஆசிரியை வகுப்பறையில் நடனம் ஆடியது தவறில்லை எனவும் பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة