வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு The target is to enroll 4 lakh students in government schools in the coming academic year
வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான (2024-25) மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்படும் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு ஒரு மாதத்துக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க பள்ளிக் கல்வித் துறை இலக்கு நிர்ணயித்து அதற்கேற்ப செயல்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டில்இருந்து தனியார் பள்ளிகளுக்கு நிகராக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள் என பல்வேறு நவீன வசதிகள் அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட உள்ளன.
அதோடு ஏறத்தாழ 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு டேப்லெட் எனப்படும் கையடக்க கணினியும் வழங்கப்பட இருக்கிறது. அரசுபள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு என்ன மாதிரியான நலத் திட்டங்கள் கிடைக்கும்,அவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அரசின் திட்டங்கள் என்னென்ன உள்ளன என்பன உட்பட பல்வேறு தகவல்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரங்களில் அரசு பள்ளிகளில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் பள்ளிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். மார்ச் 30-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிடும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، مارس 20، 2024
Comments:0
Home
Admission
Admission in Government Schools
Government School
அரசுப் பள்ளிகளில் 18 நாள்களில் 2.31 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
அரசுப் பள்ளிகளில் 18 நாள்களில் 2.31 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
Tags
# Admission
# Admission in Government Schools
# Government School
Government School
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.