Director, Art and Culture Department - 25 பகுதி நேரக் கலைப்பயிற்சி மையங்களில் கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு 31.3.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، مارس 16، 2024

Comments:0

Director, Art and Culture Department - 25 பகுதி நேரக் கலைப்பயிற்சி மையங்களில் கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு 31.3.2024 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு



Director, Art and Culture Department - 25 பகுதி நேரக் கலைப்பயிற்சி மையங்களில் கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Tamil Nadu PR [Press Release No : 574 ] From the Director, Art and Culture Department

செய்தி வெளியீடு எண்: 574

नी: 15.03.2024

செய்தி வெளியீடு

25 பகுதி நேரக் கலைப்பயிற்சி மையங்களில் கிராமியக்கலை பயிற்றுநர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாக்கவும், தொடர்ந்து வருங்காலங்களிலும் கலைகள் செழித்தோங்கவும், கலை பண்பாட்டுத்துறையின்கீழ் இயங்கும் கல்லூரிகள், பள்ளிகள் என 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது.

இம்மையங்களில் கிராமிய கலை பயிற்றுநர்கள் தொகுப்பூதிய பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பம் அளிக்கும் காலம் 31.3.2024 வரை நீட்டிக்கப்படுகிறது. சென்னை, மதுரை. கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியிலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி, திருவாரூர். திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர். கரூர், இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஆகிய 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இம்மையங்களில் ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புறக் கலைகளில் ஓராண்டு சான்றிதழ் பயிற்சியாக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடத்தப்படவுள்ளது.

25 நாட்டுப்புறக் கலைப்பயிற்சி மையங்களிலும், ஒரு மையத்தில் நான்கு பகுதி நேர நாட்டுப்புறக் கலைப் பயிற்றுநர்கள் என 100 பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.7,000/-மதிப்பூதியத்தில் நிரப்பப்படவுள்ளன. தகுதியும், திறமையும் 25 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் அல்லது தகுதியும் திறமையும் கொண்ட 50 வயதிற்கு மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் இப்பணியிடத்திற்கு 31.3.2024-க்குள் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சி நடைபெற உள்ள இடம், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, விண்ணப்பம் ஆகியவற்றை (www.artandculture.tn.gov.in) கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் கொள்ளலாம்.

விண்ணப்பங்களின் அடிப்படையில், துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதி வாய்ந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். CLICK HERE TO DOWNLOAD Tamil Nadu PR [Press Release No : 574 ] From the Director, Art and Culture Department PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة