தொலைதுார பிரிவில் இந்த படிப்புகள் நடத்த முடியாது! - மாணவர்களே 'அலர்ட் ' ஆக இருங்க. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مارس 26، 2024

Comments:0

தொலைதுார பிரிவில் இந்த படிப்புகள் நடத்த முடியாது! - மாணவர்களே 'அலர்ட் ' ஆக இருங்க.

தொலைதுார பிரிவில் இந்த படிப்புகள் நடத்த முடியாது! மாணவர்களே 'அலர்ட் ' ஆக இருங்க. These courses cannot be conducted in distance mode! Students be alert.

'பல்கலை மானியக்குழு விதிமுறைகளின் படி, தொலைதுார கல்வி முறையில் சேரும் மாணவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் அங்கீகாரம் பெற்ற பாடப்பிரிவுகளில் மட்டும் சேர்க்கை புரியவேண்டும்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிப்., மாதத்திற்கான சேர்க்கை செயல்பாடுகள், தொலைதுார கல்வி முறையில் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.

யு.ஜி.சி., இணையதளத்தில் அங்கீகாரம் பெற்ற பல்கலைகள் மற்றும் பாடப்பிரிவுகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளன.

இதை, சேர்க்கைக்கு முன் மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். முழுமையான விபரங்களை, https://www.ugc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். யு.ஜி.சி., விதிமுறையை பின்பற்றாத மூன்று பல்கலைகள், 2024 பிப்., மாத சேர்க்கை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த பெரியார் பல்கலையும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தொலைதுாரம் மற்றும் ஆன்லைன் வாயிலாக பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, பார்மசி, பாரா மெடிக்கல் பிரிவுகள், டெண்டல், நர்சிங், கட்டடவியல், விவசாயம், சட்டம், தோட்டக்கலை, ஹோட்டல் மேனேஜ்மெண்ட், கேட்டரிங் டெக்னாலஜி, ஏர்கிராப்ட் மெயின்ட னன்ஸ், விஷ்வல் ஆட்ஸ் அண்டு ஸ்போர்ட்ஸ், ஏவியேசன் உட்பட சில படிப்புகள் நடத்த அனுமதி இல்லை.

இதுபோன்ற பாடங்களை எந்த கல்வி நிறுவனங்கள் ஆன்லைன், தொலைதுார முறையில் நடத்தினாலும், மாணவர்கள் சேர்க்கை புரிய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் பெற்ற பல்கலைகளும், அந்தந்த எல்லைகளுக்குள் மட்டுமே செயல்பாடுகளை மேற்கொள்ள இயலும். பிரான்சைஸ் மையங்கள் வாயிலாக, சேர்க்கை செயல்பாடுகளுக்கு அனைத்து வகை கல்விநிறுவனங்களுக்கும் தடை அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் விபரங்களை தெளிவாக ஆய்வு செய்து சேர்க்கை புரிய யு.ஜி.சி., சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة