பள்ளிக்கு வந்த ஆசிரியரை விரட்டி அடித்த மாணவர்கள் - Video - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مارس 27، 2024

Comments:0

பள்ளிக்கு வந்த ஆசிரியரை விரட்டி அடித்த மாணவர்கள் - Video



பள்ளிக்கு வந்த ஆசிரியரை செருப்புகளை கொண்டு விரட்டி அடித்த மாணவர்கள் - Video

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். மாணவர்கள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார். இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் மாணவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த மாணவர்கள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார்.

மாணவர்களும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Click Here - Students Beat Up The Teacher - Video

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة