தமிழகத்தை போல இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்
அதிபர் ரணில் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போல் இலங்கையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை அதிபர் ரணில் விக்ரம சிங்கே தொடங்கி வைத்தார்.
ஆரோக்கியமான சுறு சுறுப்பான தலை முறை என்ற திட்டத்தின் கீழ் இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட் டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அளிக்கப்ப டும் காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்க ளின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயா ரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள் ளது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை படிக்கும் 9 ஆயிரத்து 134 பள்ளிகளில் 16 லட்சம் மாணவ மாணவிகள் பயன் அடைவர். இந்தத் திட் டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தொடங்கி வைத்தார்.
அவர் ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்கவர்களிடையே உள்ள ஊட்டச்சத்து குறை பாடு களை நிவர்த்தி செய்யவும், தினசரி வருகை விகிதத்தை அதிகரிக்கவும், ஆரோக் கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்க்கவும், கல்வியில் செயல் திறனை உயர்த்தவும் பள்ளி உணவுத் திட்டம் பயன்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து
660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
بحث هذه المدونة الإلكترونية
الأربعاء، مارس 27، 2024
Comments:0
Home
Breakfast for school children
Breakfast in schools
SCHEMES
இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்
இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்
Tags
# Breakfast for school children
# Breakfast in schools
# SCHEMES
SCHEMES
التسميات:
Breakfast for school children,
Breakfast in schools,
SCHEMES
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.