தபால் வாக்குச்சீட்டு / தேர்தல் பணிச் சான்று பெறுவதற்கான வழிமுறைகள்
கோயம்புத்தூர் மாவட்டம்
தபால் வாக்குச்சீட்டு / தேர்தல் பணிச் சான்று பெறுவதற்கான வழிமுறைகள்
முதல் பயிற்சி வகுப்புக்கு 24.3.2024 அன்று வரும்போது வாக்காளர் அடையாள அட்டை நகல் மறக்காமல் எடுத்து வரவும்.
இந்த முதல் பயிற்சி வகுப்பில், உங்கள் வகுப்பறையில் உங்களுக்கு படிவம் 12 (தபால் வாக்குக்கான படிவம்) மற்றும் படிவம் 12A (தேர்தல் பணி சான்று படிவம்) வழங்கப்படும்.
படிவம் 12: இதில் ஏற்கனவே உங்களுக்கு
வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண். வரிசை எண் அச்சிடப்பட்டிருக்கும். அந்த விவரத்தை சரி பார்த்து, தேவை இருப்பின், அதை நீங்கள் பேனாவில் திருத்தி கையெழுத்திட்டு தரவும். ஒருவேளை உங்கள் வாக்காளர் விபரம் அச்சிடப்படவில்லை என்றால் நீங்களே பூரத்தி செய்யவும்.
படிவம் 124: இதில் எந்த விவரமும் பூர்த்தி செய்யப்பட்டிருக்காது. நீங்கள் EPIC Number. பாகம் எண் (Part number) மற்றும் வரிசை எண் (Serial number) மட்டும் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு தரவும். படிவம் 12 மற்றும் 12A இரண்டையும் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தர வேண்டும். உங்களுக்கு தேர்தல் பணி, நீங்கள் வாக்காளராக இருக்கும் பாராளுமன்ற தொகுதியில் ஒதுக்கப்பட்டால் உங்களுக்கு EDC எனப்படும் Election Duty Certificate இரண்டாவது பயிற்சி வகுப்பில் வழங்கப்படும். நீங்கள் தேர்தல் பணி பார்க்கும் வாக்குச்சாவடியிலேயே EVM- வாக்களிக்கலாம்.
உங்களுக்கு தேர்தல் பணி, நீங்கள் வாக்காளாரசு உள்ள பாராளுமன்ற தொகுதி அல்லாமல் வேறு தொகுதியில் இருந்தால், ல், உங்களுக்கு தபால் வாக்கு இரண்டாம் பயிற்சி போது வழங்கப்படும். நீங்கள் இரண்டாம் பயிற்சி அன்று இதற்கென்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட Facilitation centre-ல் தபால் வாக்கு அளிக்கலாம்.
உங்கள் வாக்காளர் விவரங்களை நீங்கள் htts://electoralsearch.esi.gov.in/srsingp இணையதள முகவரியை பார்வையிடவும்.
அதில் Search by Epic" என்ற Option-ஐ கிளிக் செய்து நீங்கள் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் (Epic number). பாகம் எண் (Part number) வரிசை எண் (Serial Number) விவரங் பார்வையிடலாம்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.