ஆசிரியை முன்ஜாமின் கோரி மனு நீதிமன்றத்தில் வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مارس 12، 2024

Comments:0

ஆசிரியை முன்ஜாமின் கோரி மனு நீதிமன்றத்தில் வழக்கு



ஆசிரியை முன்ஜாமின் கோரி மனு நீதிமன்றத்தில் வழக்கு Petition for anticipatory bail of the teacher is a case in court

தேனியில் அரசு ஆசிரியர் வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் கோம்பை தனியார் பள்ளி ஆசிரியை லதா நந்தினி முன்ஜாமின் மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தமபாளையம் தாலுகா பண்ணைப்புரம் நந்தகோபால் கோயில் தெரு விவசாயி பாஸ்கரன். இவரது மனைவி ராதிகா எம்.ஏ., பி.எட்., பட்டதாரி. விவசாயி பாஸ்கரனுக்கு பண்ணைபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் அறிமுகமானார்.

இவர் தனக்கு உயரதிகாரிகள், அரசியல்வாதிகளை தெரியும். என் மனைவி லதாநந்தினி கோம்பை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். ராதிகாவிற்கு ஆசிரியர் பணி வாங்கித்தருகிறேன் என்றார். வெளி மாவட்டங்களில் ஆசிரியர் பணிக்கு ரூ.14 லட்சம், தேனி மாவட்ட பணிக்கு ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதை நம்பி பாஸ்கரன் உறவினர்களிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்று 2017 ஜன.,7ல் இரு தவணைகளாக வெங்கடேசன் வங்கிக் கணக்கில் செலுத்தினார். 2017 மே 7ல் மனைவி லதா நந்தினி மூலம் மேலும் ரூ. 5 லட்சத்தை இரு தவணைகளாக பெற்றார்.

ஆனால் வேலை வாங்கித்தராமலும், பணத்தை திரும்பி தராமலும் ஏமாற்றினார். பணத்தை பாஸ்கரன் கேட்டபோது வெங்கடேசன், அவரது மனைவி கொலை மிரட்டல் விடுத்தனர். எஸ்.பி., உத்தரவின்படி அவர்கள் மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்தனர்.

லதாநந்தினி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு செய்தார். போலீசாரின் விசாரணை முடிவதற்கு முன் முன்ஜாமின் வழங்கினால், விசாரணை பாதிக்கப்படும் என அரசு தரப்பில் ஆட்சேபனை செய்தனர். அதை ஏற்ற நீதிபதி அறிவொளி, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة