RRB - ரயில்வே அமைச்சகத்தில் உள்ள காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு - கடைசிநாள்: 8.4.2024 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 17, 2024

Comments:0

RRB - ரயில்வே அமைச்சகத்தில் உள்ள காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு - கடைசிநாள்: 8.4.2024



RRB - ரயில்வே அமைச்சகத்தில் உள்ள காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு - கடைசிநாள்: 8.4.2024

ரயில்வே அமைச்சகத்தில் உள்ள காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

தற்போது இங்கு டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) 1092, டெக்னீசியன் கிரேடு III 8052 என மொத்தம் 9,144 இடங்கள் உள்ளன. இதில் ஆர்.ஆர்.பி., சென்னைக்கு 833 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ரயில்வே பணி இடங்களுக்கான கல்வித்தகுதி: டெக்னீசியன் (சிக்னல்) பதவிக்கு பி.எஸ்சி.,/ டிப்ளமோ / பி.இ படிப்புகளும், மற்ற பதவிக்கு ஐ.டி.ஐ.யும் முடித்திருக்க வேண்டும்.

ரயில்வே பணி இடங்களுக்கான வயதுவிவரம்: 1.7.2024 அடிப்படையில் சிக்னல் பதவிக்கு 18 - 36, டெக்னீசியன் பதவிக்கு 18 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: ரயில்வே பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 250 செலுத்தினாலே போதுமானது.

கடைசிநாள்: வரும் 8.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews