இந்துசமய செயல் அலுவலர் தேர்வு; சான்றிதழ்களை பதிவேற்ற மார்ச் 15 வரை அவகாசம் - TNPSC அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مارس 04، 2024

Comments:0

இந்துசமய செயல் அலுவலர் தேர்வு; சான்றிதழ்களை பதிவேற்ற மார்ச் 15 வரை அவகாசம் - TNPSC அறிவிப்பு



இந்துசமய செயல் அலுவலர் தேர்வு; சான்றிதழ்களை பதிவேற்ற மார்ச் 15 வரை அவகாசம் - TNPSC அறிவிப்பு Hinduism Executive Officer Selection; Deadline for uploading certificates is March 15 – TNPSC Notification

சென்னை: இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தேர்வில் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றம் செய்ய மார்ச் 15 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர் (கிரேடு-1) தேர்வில் (குருப்-7-ஏ) விண்ணப்பதாரர்களால் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது சில சான்றிதழ்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இறுதி வாய்ப்பு: எனவே, அத்தகைய விண்ணப்பதாரர்கள் மார்ச் 15-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள், விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மற்றும் தேர்வாணைய இணையதள குறிப்பாணை வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, இந்த விண்ணப்பதாரர்கள் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறை பதிவின் (OTR) மூலமாக பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு செய்ய தவறும்பட்சத்தில் அத்தகைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் முழுவதுமாக நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة