CAA - அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் : மத்திய அரசு அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 11, 2024

Comments:0

CAA - அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் : மத்திய அரசு அறிவிப்பு.



அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்த சட்டம் : மத்திய அரசு அறிவிப்பு.

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு

2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது

4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்தது.

கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த ஹிந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் மசோதா 2019ம் ஆண்டு பார்லிமென்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இதில் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின.

கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், புதிய விதிகள் வெளியிடப்படாததாலும் குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.) இதுவரை அமல்படுத்தவில்லை.

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் சி.ஏ.ஏ சட்டம் அமலுக்கு வந்தது தொடர்பான அறிவிப்பாணையை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் சொல்வதென்ன?

அண்டை நாடுகளில் சிறுபான்மையாக உள்ள இந்துக்கள், சீக்கியர், கிறிஸ்தவர்களுக்கு சிஏஏ குடியுரிமை அளிக்கும்.

2014 டிசம்பர் 31க்குள் குடியேறிய இந்துகள், சீக்கியர், பௌத்தர், சமணர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் இந்தியாவில் குடியேறலாம்.

இந்தியாவில் 6 ஆண்டுகள் வசித்தாலே ஆவணங்கள் இல்லையென்றாலும் குடியுரிமையை பெறலாம்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர், இலங்கை அகதிகளுக்கு சிஏஏ-ன் கீழ் குடியுரிமை பெற அனுமதியில்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews