TANCET, CEETA entrance exam application registration 5 days extra time - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 08, 2024

Comments:0

TANCET, CEETA entrance exam application registration 5 days extra time

TANCET, CEETA நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு 5 நாட்கள் கூடுதல் அவகாசம்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான, ‘டான்செட்' நுழைவுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 9-ந் தேதியும், ‘சீட்டா' நுழைவுத்தேர்வு மார்ச் மாதம் 10-ந் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.
இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதலாக 5 நாட்கள் அதாவது, வருகிற 12-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்றாலும், டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews