மாணவிகளுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை! Request to provide scholarships to students immediately! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 07, 2024

Comments:0

மாணவிகளுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை! Request to provide scholarships to students immediately!

மாணவிகளுக்கு உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்

பெற்றோர்கள் கோரிக்கை

நெமிலி, பிப்.7- நெமிலி வட்டாரத்தில் 70 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகள் இயங்கிவருகிறது. இப்பள்ளிகளில் வறுமைக்கோட் டிற்கு கீழ் வாழும் பல்வேறு குடும்பங்களிலிருந்து மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. வகுப்பை சேர்ந்த ஏழை மாணவிகளும் படித்து வருகிறார்கள். ஆண்டுதோறும் 3 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.500, ஆறாம் வகுப்புக்கு ரூ.1,000-ம், 7,8-ம் வகுப்புகளுக்கு ரூ.1,500 கல்வி உதவித்தொகையாக அரசு வழங்கிவருகிறது.

இந்தநிலையில் நெமிலி வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதிஉதவி பள்ளிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்க வில்லை என்று கூறப்படுகிறது. சம்பந்தபட்ட துறை அலுவலர்கள், மாவட்ட அலுவலகத்திற்கு மாணவிகளின் உதவித்தொகை விவரங்கள் குறித்து பட்டியல் இதுவரைக்கும் அளிக்காமல் உள்ளதாக மாணவிகளின் பெற்றோர்கள் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஏழை மாணவிகளின் கல்வி உதவித்தொகையை உடனே வழங்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews