ph.d entrance exam - முனைவர் பட்ட படிப்புக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، فبراير 20، 2024

Comments:0

ph.d entrance exam - முனைவர் பட்ட படிப்புக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Various PhD entrance examinations such as UGC NET, GPAT, JEST, CSIR NET, GATE etc. are conducted for PhD Admissions. The most popular entrance examination for PhD Admission 2023 is UGC-NET which is conducted twice every year for PhD Admissions. The results for UGC NET June 2023 was declared on 25 Jul '23.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் முனைவர் பட்ட படிப்புக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் ஜே. சாக்ரட்டீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துறைகளில் முதுநிலை பாடப்பிரிவில் முழுநேர ஆராய்ச்சிக்காக பதிவு செய்கிற தகுதிமிக்க ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித் தொகை பெறும் வாய்ப்புகள் உள்ளது. இப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு பாடப் பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்பு பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. முனைவர் பட்ட பதிவின்போது முதுநிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதி மதிப்பெண் பட்டியலை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதி தேர்வில் 70 சதவீத மதிப்பெண்ணும், முதுநிலை பட்டத்தில் 30 சதவீத மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, தமிழக அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையின் அடிப்படையில், தகுதி பட்டியலும், தேர்வு பட்டியலும் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது தொடர்பான பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதி தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகள் போன்ற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் ( http://www.msuniv.ac.in ) கொடுக்கப்பட்டுள்ளது. UGC- NET/ UGC- CSIR NET/ GATE/ CEED/SET தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதி தேர்வு எழுத விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் ஆராய்ச்சி பிரிவு பகுதியில் இணையதள விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இணையதள விண்ணப்ப வாயில் திறக்கப்படும் நாள்- வரும் 19-ம் தேதி, மூடப்படும் நாள்- மார்ச் 3-ம் தேதி, தகுதி தேர்வு நடைபெறும் நாள்- மார்ச் 10-ம் தேதி. திருநெல்வேலி அபிஷேகப்பட்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் தகுதி தேர்வு நடைபெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة