படிப்பை தொடர வசதி இல்லையா? பள்ளி கல்வித்துறை அமைச்சரின் செயல்..! தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் அவர்கள் பதவி வகித்து வருகிறார். பள்ளி மாணவர்கள் கல்வியில் இடை நிற்றலை தடுக்கவும், தொடர்ந்து உயர்கல்வி பயிலவும் அரசு பல்வேறு திட்டங்களின் மூலமாகவும் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பை முடித்து நடப்பாண்டு கல்லூரியில் சேராத தமிழக மாணவர்களின் பெற்றோருக்கு அமைச்சர் நேரடியாக போன் கால் மூலம் அழைத்து பேசி உள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் திருச்சியை சேர்ந்த மாணவியின் அப்பாவிடம் பேசி அமைச்சர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கும் உங்கள் மகளை ஏன் கல்லூரியில் சேர்க்காமல் உள்ளீர்கள் என்று கேட்டதற்கு மாணவியின் தந்தை படிக்க வைப்பதற்கு வசதி இல்லை என்று கூறியுள்ளார். வறுமையை காரணம் காட்டி பிள்ளைகளின் படிப்பை நிறுத்தக்கூடாது. உங்கள் மகள் படிக்க விரும்பும் பாடம் குறித்து ஒரு மனுவாக எழுதி கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கும்படி கூறியுள்ளார். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும், திருச்சிக்கு வரும்போது நேரில் வந்து சந்திக்கும் படியும் கூறியுள்ளார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.