கல்வியில் உள்ள கேடுகளை அப்படியே விட்டுச் செல்வதை விட வளரும் தலைமுறைக்கு இழைக்கும் பெரிய அநீதி வேறு எதுவும் இல்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 18, 2024

Comments:0

கல்வியில் உள்ள கேடுகளை அப்படியே விட்டுச் செல்வதை விட வளரும் தலைமுறைக்கு இழைக்கும் பெரிய அநீதி வேறு எதுவும் இல்லை



கல்வியில் உள்ள கேடுகளை அப்படியே விட்டுச் செல்வதை விட வளரும் தலைமுறைக்கு இழைக்கும் பெரிய அநீதி வேறு எதுவும் இல்லை

அரசுப் பள்ளிகளின் கல்விச் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் மக்கள் கல்விக் கூட்டியக்கம் ஒருங்கிணைத்த கலந்தாய்வரங்கம் தோழர் கண. குறிஞ்சி அவர்கள் தலைமையில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கத்தில் பிப்ரவரி 17 சனிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.

ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வி,

ஆறு முதல் பத்து வகுப்பு வரையிலான இடைநிலைக் கல்வி

11 மற்றும் 12 வகுப்பு மேல்நிலைக் கல்வி

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, சாதியப் பாகுபாடுகள் என,

மேலே குறிப்பிட்டுள்ள நான்கு தலைப்புகளில் இக்கலந்தாய்வு அரங்க அமர்வுகள் நடைபெற்றன.

முதல் அமர்வை

ஆசிரியர் சீனி. சந்திரசேகரன்

(செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி -TNPTF செங்கல்பட்டு மாவட்டம்) அவர்களும்

இரண்டாவது அமர்வை

முனைவர். ஜெ.கங்காதரன் (மாநிலத் துணைத் தலைவர், தமிழகத் தமிழாசிரியர் கழகம்) அவர்களும்

மூன்றாவது அமர்வை முதுநிலை ஆசிரியர் க.பன்னீர்செல்வம் (மாநிலத் துணைத் தலைவர், நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்-DRPGTA) அவர்களும்

நான்காவது அமர்வை குழந்தைகள் உரிமைகள் செயல்பாட்டாளர்

சியாம் சுந்தர்

இதழ் ஆசிரியர் - சமத்துவக் கல்வி அவர்களும்

நெறியளர்களாகப் பொறுப்பேற்று வழிநடத்தினர். ஒவ்வொரு அமர்விலும் சராசரியாக அமர்வுக்கு 15 பேர் என்ற அளவில் 60க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று கல்விச் சிக்கல்களையும் தீர்வுகளையும் பற்றி உரையாடினர். இரண்டு மணி நேரத்தில் எல்லாவற்றையும் விரிவாகவும் ஆழமாகவும் பேசுவதற்கு சாத்தியமில்லை. எனவே, இருந்த நேரத்தில் பேசியவற்றை அமர்வின் நெறியாளர்கள் தொகுத்து முன் வைத்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மை எண்ணிக்கை அளவில் கல்லூரி மாணவர்கள் இருந்தனர். ஏறக்குறைய சம எண்ணிக்கை அளவுக்கு பெண்களும் பங்கேற்றனர். மேலும் பெற்றோர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர், கல்வி ஆர்வலர் என அனைவரின் கூட்டுச் சிந்தனைகளும் வெளிப்பட கலந்தாய்வு அரங்கம் நல்வாய்ப்பாக அமைந்தது. "இக் கலந்தாய்வரங்கம் ஒரு முதல் மற்றும் தொடக்க முயற்சி மட்டுமே. இன்னும் பல தொடர் உரையாடல்கள் நடத்த வேண்டிய தேவை உள்ளது: மக்கள் கல்விக் கூட்டியக்கம் இதை ஒரு தொடர் செயல்பாடாக எடுத்துச் செல்லும்" என்று ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இரா.முரளி அவர்கள் நிறைவுரையில் குறிப்பிட்டார்.

கலந்தாய்வு அரங்கம் சிறப்பாக அமைய பேராசிரியர் பா.சிவக்குமார் அவர்களும் பேராசிரியர் வீ.அரசு அவர்களும் மற்றும் மக்கள் கல்வி கூட்டியக்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் மிகுந்த அக்கறையோடு ஒரு மாத காலமாக செயலாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருங்காலங்களில் இப்பணியை எடுத்துச் செல்ல இன்னும் பல புதியவர்கள் இணைய வேண்டும். தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகள் உலகிற்கான சிறந்த பள்ளிகளாக மாற்றுவதற்கு அனைவரும் இணைந்து கடமையாற்றுவோம். கல்வியில் உள்ள கேடுகளை அப்படியே விட்டு செல்வதை விட வளரும் தலைமுறைக்கு இழைக்கும் பெரிய அநீதி வேறு எதுவும் இருக்க முடியாது!

சு.உமாமகேஸ்வரி,

சு.மூர்த்தி

(கலந்தாய்வரங்கம் ஒருங்கிணைப்பாளர்கள்,

மக்கள் கல்விக் கூட்டியக்கம்)

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews