CAT-B entrance exam for Biotechnology course will be held on 20th April - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 12, 2024

Comments:0

CAT-B entrance exam for Biotechnology course will be held on 20th April



பயோ டெக்னாலஜி படிப்புக்கான கேட்-பி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறுகிறது CAT-B entrance exam for Biotechnology course will be held on 20th April

முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 20-ம் தேதிநடைபெறுகிறது.

நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதேபோல், பயோடெக்னலாஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கு மாணவர்கள் பிஇடி என்றதகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதுஅவசியமாகும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கேட்-பி மற்றும் பிஇடி தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி கணினி வழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் dbt.nta.ac.in என்ற வலைதளம்வழியாக மார்ச் 6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மார்ச் 8, 9-ம் தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். தேர்வு கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,200-ம், எஸ்சி/எஸ்டி பிரிவினர்ரூ.600-ம் செலுத்த வேண்டும்.

இதுதவிர தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிமுறைகள்உட்பட கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/என்ற வலைதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews