Breaking

Monday, February 05, 2024

A request to quickly provide work to the special writers selected in the Tamil route reservation! !!



தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு விரைந்து பணி வழங்க கோரிக்கை! A request to quickly provide work to the special writers selected in the Tamil route reservation! !!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்ட தமிழ் வழி இட ஒதுக்கீட்டில்

தெரிவு செய்யப்பட்ட சிறப்பாசிரியர்களுக்கு

கலைஞர் 100 விழா நடந்தது கொண்டு இருக்கும் போதே

Mp தேர்தல்க்கு முன்பு விரைந்து பணி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்று கவின்கலைபட்டதாரிநல நல சங்கத்தலைவர் P. அய்யாவு கோரிக்கை சிறப்பாசிரியர்கள் தமிழ் இட ஒதுக்கீடு 20% தேர்வர்கள்பணி ஆணைக்காக 6 வருடமாக காத்து இருக்கிறார்கள்

சிறப்பாசிரியர் ஓவியம், தையல்,இசை, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு 2017 ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு 2019 ல் 80% ஆசிரியர்களுக்கு பணி நியமனம் செய்தார்கள்,,,, தமிழ் இட ஒதுக்கீடுகளில்(ஓவியம், தையல்)வழக்குகள் இருந்ததால் கால தாமதம் ஆனது,,,,தற்போது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லாததால்

இரண்டாவது முறை சான்றிதழ் சரி பார்ப்பதும் நடந்து தற்போது உன்மை தன்மை சான்றிதழ் சரிபார்ப்பு 2023 டிசம்பர் முதல்2024 ஜனவரி வரை வாங்கு கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது இன்னும் காலதாமதமாக ஆகிறது. விரைவில் mp தேர்தல் வர இருப்பதால் தேர்தல் விதி முறை அமுலுக்கு வரும் முன் எங்களை விரைவில் பணி நியமனம் செய்ய வேண்டும் மேலும் bc mbc, sc, sca, விதவை உடல்ஊனமுற்றோர், ராணுவம் போன்ற, இட ஒதுக்கீட்டில் தேர்வாணவர்களுக்கு பணி கிடைக்க வில்லை நிலுவையில் உள்ளது,

நிலுவையில் உள்ள அனைத்து சிறப்பாசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாண்புமிகு தமிழ் முதலமைச்சர் அவர்களுக்கும், பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களுக்கும் தாழ்மையுடன் வேண்டிய கேட்டுக்கொள்கிறோம்,,,,

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog