KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் - RBI எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 03, 2024

Comments:0

KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் - RBI எச்சரிக்கை!



KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் - RBI எச்சரிக்கை!

KYC புதுப்பிப்பு என்ற பெயரில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் ஆா்பிஐ இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடா்பாக ஆா்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கேஒய்சி புதுப்பிப்பு என்ற பெயரில் எந்த ஆவணங்களையும் அறிமுகமில்லாத நபா்களிடம் பொதுமக்கள் பகிரக் கூடாது.

இது தொடா்பாக தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசும் அடையாளம் தெரியாத நபா்கள் அல்லது குறுஞ்செய்திகளை அனுப்புவா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவா்களிடம் டெபிட், கிரெடிட் காா்டு தகவல்கள், கடவுச்சொல், ஓடிபி உள்ளிட்டவற்றை எக்காரணம் கொண்டும் பகிரக் கூடாது.

கைப்பேசி அழைப்பு, குறுஞ்செய்தி மட்டுமின்றி மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாகவும் இதுபோன்ற மோசடி முயற்சிகள் நடைபெறுகின்றன. அதில் கேஒய்சி புதுப்பிக்காவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு உடனடியாக முடக்கப்படும் என்றுகூறி பதற்றத்தை உண்டாக்கி மோசடி செய்யும் விஷமிகளும் உள்ளனா்.

எனவே, இதுபோன்ற விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

KYC புதுப்பிப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு வங்கிகளை நேரடியாக அணுகுவது அல்லது வங்கி சேவைக்கான தொடா்பு எண்ணை பயன்படுத்துவதே முறையான செயல்முறையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews