தலைமை ஆசிரியரை கடிந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் The District Collector rebuked the head teacher
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு நடத்திய ஆட்சியர், மாணவர்கள் ஆங்கில பாடத்தை வாசிக்க திணறியதை கண்டு, தலைமை ஆசிரியரை கடிந்துகொண்டார். "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாமின் ஒருபகுதியாக பண்டாரவாடை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்களை படிக்கச் சொல்லி கற்றல் திறனை ஆய்வு செய்தபோது, ஆங்கில பாடத்தை வாசிக்க திணறினர்.
அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியரிடம், மாணவர்களுக்கு குறைந்தபட்சம் வாசிக்கக் கூட கற்றுத் தரவில்லையா? என மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டார்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.