தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19ல் தாக்கல் செய்கிறார்:
சபாநாயகர் அப்பாவு பேட்டி.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024 ஆம் நாள். திங்கட்கிழமை.
காலை 10.00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும்.
அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள். 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாள். திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும்.
மேலும், 2024-2025- ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள். 20 ஆம் நாள், செவ்வாய்க்கிழமை அன்றும்,
2023-2024- ஆண்டின். கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 21 ஆம் நாள். புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்.
முனைவர் கி. சீனிவாசன்.
தலைமைச் செயலகம். சென்னை 600 009,
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.