பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் தொடக்கம் Practical exams for Plus 2 students start from today
பொதுத்தேர்வு எழுத வுள்ள பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்மு றைத் தேர்வுகள் இன்று திங் கள்கிழமை தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடைபெற வுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1. பிளஸ் 2, பத்தாம் வகுப்புக ளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்படவுள் ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற் கொள்ளப்பட்டு வருகின் றன.
இந்தநிலையில் பொதுத் தேர்வு எழுதவுள்ள பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று திங்கள்கிழமை தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்கவுள்ளனர். இதற் காக அனைத்துப் பள்ளிகளி லும் செய்முறைத் தேர்வுக்கு தேவையான ான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக் கப்பட்டுள்ளன.
அதன்படி தேர்வுத்துறை வழங்கியுள்ள வழிமுறைக ளைப் பின்பற்றி பாடவாரி யாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி வரும் 17-ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு சுற் றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
தேர்வுத்துறை சலுகை அறிவித்த மாணவர்களுக்கு மட்டும் செய்முறைத் தேர் வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், தேர்வில் ஏதேனும் புகார்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந் தப்பட்ட பள்ளி தலைமையா சிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும்.
எனவே, கூடுதல் கவனத் துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவு றுத்தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.