"தேர்வுகள் நெருங்கிவிட்டது" - ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய மாவட்டக் கலெக்டர் "Exams are around the corner" - District Collector advises teachers
ஆசிரியர்கள் மாணவர் களுக்கு இரண்டாம் பெற்றோர்கள்- மாணவர் களின் எதிர்காலத்தை நல்வழிப் படுத்துவதில் ஆசிரியர் களின் பங்கு இன்றியமை யாதது என மாவட்டக் கலெக்டர் கற்பகம் பேசினார்.
அரசு மேல்நிலைப் பள்ளி களில் பயிலும் மாணவர் கள் அரசுப்பொதுத் தேர்வினை எளிதாக எதிர்கொள்ள அவர்க ளுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும், தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுட னான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையில் நேற்று (27ஆம் தேதி) பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளியில் நடை பெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவி த்ததாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் அரசு, அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப்பள்ளி கள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 79 மேல் நிலைப்பள்ளிகள் உள்ளது.
மேல்நிலை இரண்டாமாண் டிற்கான அரசு பொதுத் தேர்வுகள் வருகிற மார்ச் 1ம்தேதி தொடங்கி 22ம் தேதிவரை முடிவுபெற உள்ளது. மேல்நிலை முதலாமாண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 4ம்தேதி தொடங்கி 25ம்தேதி முடிவு பெற வுள்ளது. பத்தாம் வகுப்பி ற்கான அரசு பொதுத்தேர்வு மார்ச் 26ம்தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது.
மேல்நிலைத் தேர்வுக ளுக்கு 35 தேர்வு மையங் கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. மேல்நிலைப் பொதுத்தேர்வில் பதினோ றாம் வகுப்பு பொதுத்தேர் விற்கு 3,850 மாணவர்கள், 3,823 மாணவிகள் என மொத்தம் 7,673 மாணவ மாணவிகள் தேர்வெழுத உள்ளார்கள். பன்னிரெ ண்டாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு 3,558 மாணவர் கள், 3,536 மாணவிகள் என மொத்தம் 7,094 மாணவ மாணவிகள் தேர்வெழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை பொறு த்தவரை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 141 பள்ளிகளைச் சேர்ந்த 4,376 மாணவர்கள், 3,627 மாணவிகள் என மொத்தம் 8,003 மாணவ மாணவிகள் 42 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வை எழுத உள்ளனர்.
பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளின் திறன் குறித்த புரிதல் ஆசிரியர்களுக்கு நிச்சயம் இருக்கும். அப்படி மாண வர்களின் திறமையை அறிந்து அவர்கள் தேர்வை எளிதில் எதிர்கொள்ளத் தேவையான பயிற்சியி னை, ஊக்கத்தை ஆசிரிய ர்கள் வழங்க வேண்டும்.
மாணவ மாணவிகளின் இரண்டாம் பெற்றோராக திகழ்பவர்கள் ஆசிரியர் களே. அரசு பொதுத் தேர்வினை எவ்வாறு எதிர் கொள்வது, முக்கிய வினா விடைகள் எவை, எளிதில் புரிந்து படிப்பது எப்படி, கேள்விக்கு உரிய விடை யை எவ்வாறு அளிக்க வேண்டும்.
மாணவர்களின் சிந்தனை தேர்வினை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும். தொலைக் காட்சி, செல்லிடப்பேசிகள் என அவர்களின் சிந்தனை யை சிதறடிக்கும் செயல் பாடுகள் இல்லாமலும், மானவர்களுக்கு கவனச் சிதறல் இல்லாமல் அவர்களை ஒருநிலைப் படுத்தி, தேர்வை தைரிய மாக எதிர்கொள்ள தேவை யான பயிற்சிகளை ஆசிரி யர்களாகிய நீங்கள் வழங்க வேண்டும். நானும் அடிப்படையில் ஒரு ஆசி ரியராக இருந்து ஆட்சி யராக ஆகியிருக்கிறேன். எனவே ஆசிரியர் பணி யின் முக்கியத்துவம் என க்கு முழுமையாக தெரியும். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வினை எதிர்கொள்ளக் கூடிய அனைவரும் 100சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஆசிரியர்கள் அந்த இலக்கினை அடை வதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அர்ப்பணிப் புடன் பணியாற்ற வேண் டும் எனத்தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் மணிவண்ணன், மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெகநாதன், தேர்வுத் துறை உதவி இய க்குனர் கல்பனாத் ராய், முதன்மைக் கல்வி அலு வலரின் நேர்முக உதவி யாளர் சுரேஷ் மற்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பொதுத்தேர்வினை எதிர்கொள்ளக் கூடிய அனைவரும் 100சதவீதம் தேர்ச்சி அடைய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஆசிரியர்கள் அந்த இலக்கினை அடை வதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து அர்ப்பணிப் புடன் பணியாற்ற வேண்டும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.