அரசு பள்ளிகளில் ஆங்கில மொழித்திறன் தேர்வு: சர்வர் குளறுபடியால் சுணக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 14, 2024

Comments:0

அரசு பள்ளிகளில் ஆங்கில மொழித்திறன் தேர்வு: சர்வர் குளறுபடியால் சுணக்கம்

அரசு பள்ளிகளில் ஆங்கில மொழித்திறன் தேர்வு: சர்வர் குளறுபடியால் சுணக்கம் English Language Proficiency Test in Government Schools: Haunted by Server Glitch

ஆங்கில மொழித்திறன் அறிய, ஆன்லைன் மூலம் நேற்று துவங்கிய மொழித்திறன் தேர்வு, சர்வர் குளறுபடியால், பல பள்ளிகளில் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசுப்பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின், ஆங்கில மொழித்திறன் அறிய, ஆன்லைன் தேர்வு நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி வரை, இத்தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் உள்ள ஹைடெக் ஆய்வகத்தில், இத்தேர்வு நடத்த வேண்டும்.ஒரு மாணவருக்கு தலா 40 நிமிடங்கள் ஒதுக்கப்படும். கொள்குறி வகையிலான, 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.பின்பு, ஆடியோ வடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் கூற வேண்டும். இதன்மூலம் மாணவர்களின் உச்சரிப்பு, வாக்கியத்தை உருவாக்கும் திறன் பதிவு செய்யப்படுகிறது. இத்தேர்வு, சர்வர் குளறுபடியால், பல பள்ளிகளில் நேற்று நடக்கவில்லை.அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், தமிழகம் முழுக்க, குறிப்பிட்ட நாட்களில் இதுபோன்ற ஆன்லைன் தேர்வு நடத்துவதால், குறைந்த நெட் ஸ்பீடு, நெட்வொர்க் பிரச்னை, உள்ளிட்ட காரணங்களால், பங்கேற்க முடியாத நிலை நீடிக்கிறது. மாவட்ட வாரியாக பிரித்து இத்தேர்வு நடத்தலாம். வரும் 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இன்று(நேற்று) முழுக்க, தேர்வுக்குரிய இணையபக்கத்தை இயக்க முடியவில்லை என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews