மாநகராட்சி பள்ளி மாணவி ஐ.ஐ.டி., மெட்ராஸில் சேர தகுதி.Corporation School Student Eligibility for admission in IIT, Madras.
கோவை, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா, ஐ.ஐ.டி., மெட்ராஸில், பி.எஸ்., படிப்பில் சேர நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று, தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், அனைவருக்கும் 'ஐ.ஐ.டி.,-எம் (மெட்ராஸ்)' கீழ், பள்ளி மாணவர்கள், நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில், இளங்கலை அறிவியல் (பி.எஸ்.,), நான்கு ஆண்டுக்கால ஆன்லைன் படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பரில் நடந்த இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, ஆர்.எஸ்.புரம் மேற்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்தனா, சாதனை படைத்துள்ளார்.
கோவையில் 30 மாணவர்களுக்கும் மேல் இத்தேர்வு எழுதினர்.
கீர்த்தனா மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.