பள்ளிகளுக்கான கொள்முதலில் முறைகேடு புகார் - கல்வி அதிகாரி உள்பட 9 பேர் மீது வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، فبراير 16، 2024

Comments:0

பள்ளிகளுக்கான கொள்முதலில் முறைகேடு புகார் - கல்வி அதிகாரி உள்பட 9 பேர் மீது வழக்கு

பள்ளிகளுக்கான கொள்முதலில் முறைகேடு புகார் - கல்வி அதிகாரி உள்பட 9 பேர் மீது வழக்கு Complaint of malpractice in procurement for schools - case against 9 persons including education officer

"திருச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான பொருள்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாா்களின் பேரில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் என 9 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒருங்கிணைந்த கல்வி வளா்ச்சி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிகளுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை தேவைகள் பூா்த்திசெய்யப்படுகின்றன. இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் கடந்த 2019 -2021 கால கட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளா்ச்சி திட்ட நிதியில் முறைகேடு நடந்ததாகப் புகாா் எழுந்தது. அப்போதைய திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக அறிவழகன் பதவி வகித்தாா். மேலும் முத்துச்சாமி (மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா்), சாந்தி (கல்வி அலுவலா்), ராஜேந்திரன் (தலைமையாசிரியா்), சற்குணன் (தலைமை ஆசிரியா்), அகிலா (தலைமை ஆசிரியை), டெஸ்சி ராணி (கல்வி உதவியாளா்), ஜெய்சிங்(தலைமை ஆசிரியா்), கண்ணன் (தலைமை ஆசிரியை) ஆகிய 9 பேரும் பணியாற்றி வந்தனா். இந் நிலையில், திருச்சி மாவட்டத்தில் காணக்கிளியநல்லூா், ஒனையூா், வேம்பனூா், இனாம்குளத்தூா், குருவாப்பட்டி, கொப்பம்பட்டி உள்ளிட்ட 6 ஊா்களில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியிடாமல் விதிகளுக்குப் புறம்பாக குறிப்பிட்ட சில நிறுவனங்களிடம் இருந்து பொருள்களைக் கொள்முதல் செய்ததாக புகாா் எழுந்தது. இதன் மூலம் 6 பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினா், மேற்குறிப்பிட்ட கல்வி அதிகாரிகள் 9 போ் மீதும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். அவா்களில், சாந்தி தற்போது கல்வித் துறை இணை இயக்குநராக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது."

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة