WhatsApp Update:
வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சாட்களை போன்று, சேனலிலும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா.
அதுமட்டுமன்றி சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்களை பயனர்கள் தங்களின் ஸ்டேட்டஸில் நேரடியாக பதிவிடும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நாளுக்கு நாள் புதுபுது அப்டேட்களை தருவதால் வாட்ஸ்அப் பயனர்கள் மகிழ்ச்சி! வாட்ஸ்அப்பில் (Offline) புளூடூத்தை பயன்படுத்தி அருகில் இருப்பவர்களுடன் 2GB வரையிலான கோப்புகளை ஷேர் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்!
ஆண்ட்ராய்டில் உள்ள Near by share போன்று 'ஷேர் ஃபைல்ஸ்' என்ற Option-ஐ பயன்படுத்தி Files-ஐ ஷேர் செய்து கொள்ளலாம்.
பயனரின் மொபைலை அசைப்பதன் மூலம் மற்றவரின் ஷேர் Request-ஐ காண இயலும்.
இந்த அம்சம் தற்போது சோதனை கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மெட்டா தகவல்.
புதிய அப்டேட்கள் மூலம் பயனர்களை ஈர்த்து வருகிறது வாட்ஸ்அப்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.