கோச்சிங் சென்டர்களுக்கு புதிய கட்டுப்பாடு
16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை சேர்க்கக் கூடாது என கோச்சிங் சென்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. ஆசிரியர் தகுதி விவரம், பயிற்சி மற்றும் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
மேலும், பெற்றோர்களை தவறாக வழிநடத்துவது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்பட முறைகேடுகளில் ஈடுபட்டால், ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது கோச்சிங் சென்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமென எச்சரித்துள்ளது. நீட், ஜே.இ.இ பயிற்சி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு
வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய கல்வி அமைச்சகம்
"16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி மையங்களில் அனுமதி இல்லை"
மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை ஆசிரியர்களாக நியமனம் செய்ய தடை
விதிமுறைகளை மீறும் பயிற்சி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும்- மத்திய கல்வி அமைச்சகம்
விதிமீறும் பயிற்சி நிறுவனங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.