உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான நீட் மதிப்பெண் ரத்து
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு பிறகு டிஎம், எம்சிஎச், டிஎன்பி உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் எஸ்.எஸ்.) நடத்தப்பட்டு வருகிறது.
தேசிய தேர்வு முகமை (என்பிஇஎம்எஸ்) மூலம் அந்த தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த அக்.15-ல் வெளியானது. நாடுமுழுவதும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. ஆனால், கலந்தாய்வில் பெரும்பாலான இடங்கள் நிரம்பவில்லை. இதையடுத்து சிறப்பு கலந்தாய்வு மூலம் காலியாகவுள்ள இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்காக நீட் தேர்வு தகுதி மதிப்பெண் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.