சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يناير 26، 2024

Comments:0

சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன

சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசம் என்ன என்றார் நண்பர்...

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் .

அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று...

கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்

இதை கொடியை பறக்கவிடுதல் அதாவது flag unfurling என்பார்கள்.. இரண்டாவது வித்தியாசம்......

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை.

அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head கருதப்பட்டார்.

குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy,

அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.

இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால் . அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

மூன்றாம் வித்தியாசம்.......

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ் பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.. ..அவ்வளவுதான்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة