கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும் - வெ. இறையன்பு Studying-mathematics-keeps-the-brain-young - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يناير 30، 2024

Comments:0

கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும் - வெ. இறையன்பு Studying-mathematics-keeps-the-brain-young

It also helps to create active neurons in the brain, thereby keeping our brain much younger. “Mathematics helps to achieve academic excellence, scientific advancement, technological improvement and engineering development depend on learning mathematics,” he said.


கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும்.

விஐடி பல்கலைக்கழக கணிதத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கணிதப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வேலூரில் உள்ள விஐடி அண்ணா அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு விஐடி.வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர் களுக்கு மற்ற பாடங்களை விட கணிதம் பாடம் மிகவும் முக்கிய மானதாகும். வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் தேவை உள்ளது கணிதம் என்பது ஒரு தொழில்நுட்ப மொழி. எனவே கணிதம் இல்லாமல் எதிர்காலம் இல்லை. பிரச்சனைகளை தீர்க்க வும் புதுமைகளை படைக்கும் தீர்க்கமான புரிதல் ஏற்படும் கணி தம் அடிப்படையாக உள்ளது என்றார். சிறப்பு விருந்தினராக தமிழ் நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கலந்து கொண்டு பேசுகையில், பள்ளி மாணவர்களுக்கு கணிதப் போட்டியை நடத்திய விஐடி பல்கலைக்கழகத்தை பாராட்டு கிறேன். அறிவியல், வேதியியல், தாவரவியல் உள்பட பல படிப்பு களில் கணிதம் உள்ளது. மருத்துவத் துறையில் கணிதம் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கணிதத்தின் தேவை 18ம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தேவைப்பட்டுள்ளது. அப்போது மக்கள் விவசாயத்தில் இருந்த னர்.

இலக்கியத்திலும் கணிதம் உள்ளது. திருக்குறளில் மனித நேயம் பற்றி கூறப்பட்டுள்ளது. விலங்கினங்களுக்கு எண்களை தெரியும். கணிதம் படிப்பதால் மூளை இளமையாக இருக்கும். ஒரு மனிதனை சுறுசுறுப்பாக வைத்தி ருக்கும். படிப்பிலும் சிறப்பான இடம் பெற வழி வகுக்கும். இது ஒரு உலக மொழியாகும். நிதி துறையிலும் கணிதம் முக்கிய பங்கு வகிக்கிறது. கணிதத்தை கடினம் என நினைத்தால் கடின மாக இருக்கும். சுலபம் என நினை த்தால் சுலபமாகிவிடும். கணித மேதை ராமானுஜம் எளிய குடும்பத்தில் பிறந்தவர். தன்னு டைய கணித திறமையால் வாழ்க் கையில் உயர்ந்தார். கணித மேதைகளின் வாழ்க்கை வரலாற்றை மாணவர் கள் படிக்க வேண்டும். கணி தத்தில் யாரும் நோபல் பரிசு பெற்ற தில்லை. கணிதத்தில் உயர்ந்த பரிசு என்றால் அது ஏபல் கணித பரிசாகும். இங்குள்ள மாண வர்கள் சிலர் கணித பாடத்தில் சேர வேண்டும். மேலும் கணிதத்தில் உயர்ந்த பரிசான ஏபல் கணித பரிசை பெற வேண்டும் என பேசி னார். கௌரவ விருந்தினராக விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவியும், பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானியுமான லட்சுமி கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் துணைத் தலை வர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) காஞ்சனா பாஸ்கரன், இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதி வாளர் ஜெயபாரதி, ஒருங்கி ணைப்பு செயலாளர்கள் நந்தினி, கவுரிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறை வாக ஒருங்கிணைப்பு செய லாளர் ஈஸ்வரமூர்த்தி நன்றி கூறி னார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة