மாநில அளவிலான கவிதை, கட்டுரை போட்டி தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يناير 11، 2024

Comments:0

மாநில அளவிலான கவிதை, கட்டுரை போட்டி தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு



மாநில அளவிலான கவிதை, கட்டுரை போட்டி தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு Tamil Development Department Notification for State Level Poetry, Essay Competition

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடத்தப்படும், மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் வரும், 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

தமிழ் வளர்ச்சி துறையானது, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் தமிழ் அறிவை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில், மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்துள்ளன. சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நேற்றும், இன்றும், சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலை பள்ளியிலும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், சென்னை மாநில கல்லுாரியிலும் நடக்கின்றன.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு தலா 10,000, 7,000, 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மட்டும், வரும் 23, 24ம் தேதிகளில் மாநில அளவிலான போட்டிகள் நடக்க உள்ளன. சென்னையில் நடக்க உள்ள இந்த போட்டிகளுக்கான இடம், இன்னும் தேர்வாகவில்லை.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 15,000, இரண்டாம் பரிசாக 12,000, மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة