நெதர்லாந்து கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يناير 05، 2024

Comments:0

நெதர்லாந்து கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை

நெதர்லாந்து கல்வி நிறுவனங்களில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை Scholarships for Indian students who wish to study in Netherlands educational institutions

நெதர்லாந்து உதவித்தொகை

நெதர்லாந்து கல்வி நிறுவனங்களில் இளநிலை அல்லது முதுநிலை படிப்புகளை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை திட்டத்திற்கு, டச்சு கல்வி, கலாசாரம், அறிவியல் அமைச்சகம் மற்றும் பல டச்சு ஆராய்ச்சி மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழகங்களால் நிதியளிக்கப்படுகிறது.

உதவித்தொகை விபரம்: முதலாம் ஆண்டு படிப்பில் 5 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்படுகிறது. நெதர்லாந்து கல்வி நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக்கட்டணத்திற்கு முழுமையாக உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. தகுதிகள்:

* ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை இல்லாதவராக இருக்க வேண்டும்.

* டச்சு உயர்கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர இளநிலை அல்லது முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கான தகுதி விபரங்களுக்கு, அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.

* நெதர்லாந்தில் உள்ள எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பட்டம் பெறாதவராக இருத்தல் அவசியம்.

உதவித்தொகை பெற தகுதியான ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்:

லைடன் பல்கலைக்கழகம்

உட்ரெக்ட் பல்கலைக்கழகம்

க்ரோனிங்கன் பல்கலைக்கழகம்

எராஸ்மஸ் பல்கலைக்கழகம் ரோட்டர்டாம் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக்கழகம்

வி.யு., ஆம்ஸ்டர்டாம்

ராட்பவுட் பல்கலைக்கழகம்

டில்பர்க் பல்கலைக்கழகம்

டெல்ப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

ட்வென்டே பல்கலைக்கழகம்

வாகனிங்கன் பல்கலைக்கழகம்

தியாலஜிக்கல் பல்கலைக்கழகம் - அப்பல்டோர்ன்

தியாலஜிக்கல் பல்கலைக்கழகம் - கம்பன்

விண்ணப்பிக்க கடைசி நாள்: பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப விண்ணப்ப தேதி மாறுபடும்.

விபரங்களுக்கு: https://www.studyinnl.org/finances/nl-scholarship

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة