ஜன. 23-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக ஜனவரி 23 ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் படித்து வேலை வாய்ப்பை தேடி வரும் பட்டதாரிகளுக்கும் இளைஞர்களுக்கும் உரிய முறையில் வேலை வாய்ப்பை வழங்க நோக்கில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜனவரி 23ஆம் தேதி காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட நிர்வாகம் இணைந்து இலவச வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இந்த முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட அனைவரும் பங்கேற்கலாம் பட்டதாரிகள், பட்டப்படிப்பு ஐடிஐ, 10 மற்றும் 12ம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்களும் பங்கேற்று அதற்கேற்றவாறு வேலைவாய்ப்பு பெறலாம்.
முகாமிற்கு வரவுள்ளவர்கள் சுயவிவர குறிப்புடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வர வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044 – 27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.